சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 600 கோடி வசூல் கொடுத்த ஜெயிலர் படம்.. Part 2 ரெடி, வெறித்தனமான அப்டேட்
ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை லாபத்துடன் தேடி கொடுத்தது என்று கூட சொல்லலாம். உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கின்றனர்.
இதுவரை இவ்வளவு பெரிய லாபம் படங்களில் இருந்து சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படம் அவருக்கு மாஸ் கம் பேக் படமாக அமைந்தது. கண்டிப்பாக ஜெயிலர் 2 வரும் என ஏற்கனவே தகவல் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜெயிலர் 2 உருவாகுவது உறுதி என்றும், அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் கூட நெல்சன் துவங்கிவிட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஜெயிலர் முதல் பாகம் எப்படி மாபெரும் அளவில் வெற்றியடைந்ததோ, அதே போல் ஜெயிலர் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் ஜெயிலர் 2 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தாலும் ஆசிரியப்படுத்தற்கு இல்லை என்றும் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.