யாழ்ப்பாண வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் இன்று விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் உள்ள பல வீடுகளில் டெங்கு பரவும் சாத்தியம் உள்ளமையால் அதன் உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சுகாதார பணிப்பாளர், வட மாகாண பிரதி காலல்துறைமா அதிபர் ஆகியோரின் பங்கேற்புடன் குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டமானது முன்னெடுக்கப்படுகிறது.
கொக்குவில் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சென்று வீடுகளில் டெங்கு நுளம்பு காணப்படும் இடங்கள் அகற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.