இலங்கையில் பெரும் சோக சம்பவம்... 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!
இரத்தினபுரி - பனாபொல பிரதேசத்தில் இறப்பர் பட்டி கழுத்தில் இறுக்கியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பனாபொல கங்கனமல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய ககனா என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் பாடசாலை ஒன்றில் 4ம் வகுப்பில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிறுவன் தனது வீட்டில் இறப்பர் பட்டி ஒன்றை இரும்பு ஒன்றில் கட்டி சுழற்றியதாகவும், பின்னர் அந்த இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.