நடைமுறைக்கு வரும் வகையில் மதுவரி உரிமக்கட்டணங்கள் திருத்தம்..!
ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த மதுவரி உரிமக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதாரம், ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பனை சாராயம் நீங்கலாக வருடாந்த மதுபான உற்பத்தி உரிமக் கட்டணம் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
250,000 ரூபாவாக இருந்த பனை மதுபான உற்பத்தி நிலைய உரிமக் கட்டணம் 50 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கள் போத்தல் செய்வதற்கான உரிமக் கட்டணம் 10 இலட்சம் ரூபாவிலிருந்து 1 கோடி ரூபாவாகவும், வினிகர் தொழிற்சாலைகளுக்கான உரிமக் கட்டணம் 05 இலட்சம் ரூபாவிலிருந்து 25 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புதிய கட்டண திருத்தத்தின்படி மதுபானங்களுக்கான ஆண்டு மொத்த விற்பனை உரிமக் கட்டணம் 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உரிமத்தை மாற்றுவதற்கான கட்டணம் 250,000 ரூபாய் என்றும், சட்டப்பூர்வ வாரிசு இல்லாத ஒருவருக்கு கலால் உரிமம் ஒதுக்கப்பட்டால், 15 இலட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.