நீ விஜயகாந்த் ஆளு... சான்ஸ் இல்லை போ! செட்டுக்கு வர வைத்து அசிங்கப்படுத்திய வடிவேலு..!
நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.
ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பலர் நேரில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் நடிகர் வடிவேலு ஒரு இரங்கல் பதிவு கூட போடவில்லை.
வடிவேலு மற்றும் விஜயகாந்த் இடையே பிரச்சனை இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இறந்தபின் அஞ்சலி கூட செலுத்த வராத அளவுக்கு பகையா என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் இருந்த போது வடிவேலு அங்கே வந்தாராம். வணக்கம் சொல்லி பேசிய பிறகு, "நாளை ஒரு பட ஷூட்டிங் இருக்கிறது இயக்குனரிடம் பேசிட்டேன் வந்துவிடு " என கூறினாராம்.
ஆனால் மறுநாள் போனால், 3 மணி நேரம் காக்க வைத்து விட்டு "நீ வீஜயகாந்த் ஆளு, உனக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை போ" என சொல்லி அசிங்கப் படுத்தினாராம்.
அதனால் வடிவேலுவிடம் சண்டை போட்டுவிட்டு அவர் வந்து விட்டாராம். நீ இதை பெரிதாக தட்டி கேட்டிருந்தால் நான் உனக்கு ஆதரவாக வந்திருப்பேன் என விஜயகாந்த் கூறினாராம்.