சோமாலியா பிரதமர் ஹசன் அலி கைர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்மூலம் நீக்கம்!

சோமாலியா பிரதமர் ஹசன் அலி கைர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்மூலம் நீக்கம்!

சோமாலியாவின் நாடாளுமன்றம் பிரதமர் ஹசன் அலி கைரை (Hassan Ali Khaire) நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் நீக்கியுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்த வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், பிரதமரை நீக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் 170 ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கு சோமாலியாவின் ஜனாதிபதியை தாங்கள் கேட்டுள்ளதாக சபாநாயகர் மொஹமட் முர்சல் ஷேக் அப்திரஹ்மான் (Mohamed Mursal Sheikh Abdirahman) தெரிவித்துள்ளார்.