ஸ்ரீலங்காவின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா

ஸ்ரீலங்காவின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதால், அதன் பலனை பெற்று எரிபொருளை களஞ்சியப்படுத்த திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பில் உள்ள 27 தாங்கிகளை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.

தற்போது பயன்படுத்த முடியாத நிலைமையில் உள்ள திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை திருத்தி பயன்படுத்த வழங்குமாறு மின்வலு, எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் போபால் பக்லேவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் தேவையெனில் இந்தியா அவற்றை புதுப்பித்து வழங்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ளார்.

பெற்றுக்கொள்ள உத்தேசித்திருந்த எண்ணெய் தாங்கிகளை ஆறு மாத காலத்திற்குள் புதுப்பிக்கவும் அதற்கான செலவுகளை குறிப்பிட்டு, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் வழங்கிய அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போது அமைச்சர் உயர் அதிகாரி ஒருவர் மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் 35 ஆண்டு குத்தகைக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் சீனக் குடா பகுதியில் இருக்கும் நல்ல நிலையில் உள்ள 15 தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

இதனை தவிர லீசி எண்ணெயை களஞ்சியப்படுத்தவும் அந்த நிறுவனம் இரண்டு தாங்கிகளை பயன்படுத்தி வருகிறது. மேலும் சில தாங்கிகளை இந்திய நிறுவனம் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.