இலங்கையில் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (26-12-2023) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும், அதேவேளை வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல முறைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! | Announcement About Tomorrow S Weather In Sri Lanka

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இலங்கையில் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! | Announcement About Tomorrow S Weather In Sri Lanka

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.