போதைப்பொருள் வியாபாரம் செய்த தபால்காரர் கைது!

போதைப்பொருள் வியாபாரம் செய்த தபால்காரர் கைது!

ஹோமாகம தபால் நிலையத்தில் தபால்காரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் அத்துருகிரி, புஞ்சி அதுருகிரி பகுதியில் கைது செய்யப்பட்டதாக அத்துருகிரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் வேறொரு சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த வேளை, பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரம் செய்த தபால்காரர் கைது! | Postman Arrested With Ice Drug

அதன் போது சந்தேகநபரிடமிருந்து 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விசாரணைகளில் சந்தேகநபர் கடிதங்களை விநியோகிக்கும் போதே போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வியாபாரம் செய்த தபால்காரர் கைது! | Postman Arrested With Ice Drug

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.