
அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்
அரசியல் ரீதியான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள், விருந்துகள் ஆகியவற்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துக்கொள்வதை தவிர்க்கும் அவசியத்தை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகள் அல்லது மண்டபங்களில் ஒழுங்கு செய்யப்படும் இப்படியான வைபவங்கள் அல்லது தொழிற்சங்க கூட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, ஈடுபடவுள்ள அதிகாரிகள் கலந்துக்கொள்ளக் கூடாது என குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களல் இப்படியான சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் தேர்தல் செயலகத்திற்கும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் அலுவலங்களுக்கும் கிடைத்துள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையில், ஊடகங்களுக்கு அது பற்றிய தகவல்கள் எதனையும் வழங்க முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.