மனைவி மீதான கோபத்தில் கணவன் செய்த மோசமான செயல்.
புத்தளத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ - அனவிலுந்தவ, ஜயரத்ன புர பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீயினால் முழுமையாக சேதமடைந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் கணவன் வீட்டுக்குத் தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். .
தீயினால் வீடு மற்றும் தளபாடங்கள் சேதம் அடைந்துள்ள போதிலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.நஷ்டம் இதுவரை மதிப்பிடப்படவில்லை.
ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.