
முக்கிய தமிழர் பகுதியில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்!
யாழ்ப்பாண மாவட்டம் துன்னாலை குடவத்தை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் தொலைபேசிகளும் கைப்பற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 43 வயதான பெண் நெல்லியடி பொலிஸாரால் நேற்று (21-12-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 620 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், 678,900 ரூபாய் பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.