ரோமேனியா- பல்கேரியா நாட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படுவார்கள்: இத்தாலி அறிவிப்பு!

ரோமேனியா- பல்கேரியா நாட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படுவார்கள்: இத்தாலி அறிவிப்பு!

ரோமேனியா மற்றும் பல்கேரியாவில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இத்தாலி அறிவித்துள்ளது.

இதற்கான தனிமைப்படுத்தல் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக, இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று பரவலை இத்தாலிக்குள் பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகப்புத்தக பதிவில், ‘வைரஸ் தோற்கடிக்கப்படவில்லை, தொடர்ந்து பரவுகிறது. இந்த காரணத்திற்காக நாங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, ஏற்கனவே பிரேஸில் உட்பட 16 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதை தடை செய்திருந்தது.