
இந்திய தூதரக அதிகாரியின் வீட்டில் மர்மக்கும்பல் கைவரிசை!
இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளரின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளையர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளரின் பொறள்ளையில் அமைந்துள்ள வீட்டை உடைத்து அங்கிருந்த 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக குற்ற விசாரணை அதிகாரிகள், விசேட பொலிஸ் குழு மற்றும் பொறள்ளை பொலிஸார் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.