கீரி சம்பாவிற்கு பதிலாக புதிய வகை அரிசி!

கீரி சம்பாவிற்கு பதிலாக புதிய வகை அரிசி!

கீரி சம்பா அரிசிக்குப் பதிலாக 50,000 மெற்றிக் தொன் GR 11 ரக அரிசியை தனியார் துறையினர் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த உணவுக் கொள்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கீரி சம்பாவிற்கு பதிலாக புதிய வகை அரிசி! | Permiss Import Sri Lanka Gr 11 Rice Keeri Samba

உள்ளூர் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசியின் விலையை போட்டியாக வைத்து நுகர்வோருக்கு விலை அனுகூலத்தை வழங்கும் நோக்கில் இந்த அரிசியின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.