வடக்கு - கிழக்கு தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

வடக்கு - கிழக்கு தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

இலங்கையில், வடக்கு - கிழக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் மழையானது தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை பெய்ய வாய்ப்புதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார்.

இதேவேளை அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கு தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்! | In The North East Chance Of Flood Disaster

நாட்டின் கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி காரணமாக தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைத்து வருகிறது.

இந்த மழையை பொறுத்தவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.

வடக்கு - கிழக்கு தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்! | In The North East Chance Of Flood Disasterஏற்கனவே வடக்கு மாகாணத்தினுடைய தரை மேல் நீர் பரப்புக்கள் அவற்றினுடைய உவர் நீரை வெளியேற்றுகின்ற இந்த சூழ்நிலையில் தொடர்ந்து கிடைத்து வருகின்ற கனமழை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ் நிலங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறியப்படுகிறது.

எனவே தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

வடக்கு - கிழக்கு தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்! | In The North East Chance Of Flood Disasterமீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையினுடைய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் தொடர்ச்சியாகவும் மழை நீடிப்பதற்கான வாய்ப்புகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்றது.

தொடர்ச்சியான மழை கிடைக்கும் என்பதனால் இந்த தாழ்நில பகுதிகளில் இருக்கும் மக்கள் மழைவீழ்ச்சி தொடர்பான அளவு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.