நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய 473 பேர் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய 473 பேர் கைது

நாடளாவியரீதியில்  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது  போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய  குற்றச்சாட்டில் 473 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த  23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல்  நேற்று நள்ளிரவு வரையான காலப்பகுதியில்  குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.

இதன்படி  ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்  301 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  கஞ்சா போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்  163 பேரும் ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்  9 சந்தேக நபர்க் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த காலப்பகுதியில்  நான்கு சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர்கள் மூவர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்  சட்டவிரோதமதுபான உற்பத்தி மற்றும் விற்பனை  ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்  307 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பிடியாணை  பிறப்பிக்கப்பட்ட  276 சந்தேக நபர்களும்  வேறு குற்றங்களுடன் தொடர்படைய  691  சந்தேகநபர்களும் குறித்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.