கால்வாய்க்குள் பாய்ந்த சொகுசுக் கார்

கால்வாய்க்குள் பாய்ந்த சொகுசுக் கார்

கால்வாய் ஒன்றுக்குள் கார் ஒன்று கவிழ்ந்து வீழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் சாரதி காருக்குள் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவாசமாக உயிர்தப்பியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு - 15 மட்டக்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காரை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் காருக்குள் சேற்று நீர் புகுந்து சேதமடைந்துள்ளது

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்