காதலனுடன் ஓடிய பெண்: காதலனின் தாயைக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம்

காதலனுடன் ஓடிய பெண்: காதலனின் தாயைக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் காதலனுடன் பெண் ஊரை விட்டு ஓடியதால், காதலனின் தாயை குறித்த பெண்ணின் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி ஊருக்குள் வலம் வரச்செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், கர்நாடகா - பெலகாவி மாவட்டத்தையில் உள்ள வந்தமரி கிராமத்தில் நடந்துள்ளது.

காதலனுடன் ஓடிய பெண்: காதலனின் தாயைக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம் | Girl Boyfriend Escape Parade Lover S Mother Naked

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்ட பெண், திடீரென தனது காதலனுடன் ஊரைவிட்டு ஓடியுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு இன்னொரு நபருடன் நிச்சயிக்கப்பட்டு, இன்றைய தினம் (11-12-2023) திருமணம் நடைபெறுவதாக இருந்த சூழலில், முன்தினம் மகள் ஓடிப்போனதில் அவமானம் அடைந்ததாக பெண் வீட்டார் கருதினார்கள்.

காதலனுடன் ஓடிய பெண்: காதலனின் தாயைக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம் | Girl Boyfriend Escape Parade Lover S Mother Naked

இதனால், பழிவாங்கல் நடவடிக்கையாக இளைஞனின் வீடு மீது, நேற்று நள்ளிரவு கூட்டம் ஒன்று தாக்குதல் நடத்தியது.

பின்னர் அந்த வீட்டில் தனியே இருந்த இளைஞனின் தாயை வெளியே இழுத்துவந்து நிர்வாணப்படுத்தி, ஒரு மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர். நிறைவாக அந்தப் பெண்ணை ஊருக்குள் நிர்வாணமாக வலம் வரச் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து, கும்பலின் பிடியிலிருந்து காதலனின் தாயை மீட்டனர்.

காதலனுடன் ஓடிய பெண்: காதலனின் தாயைக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம் | Girl Boyfriend Escape Parade Lover S Mother Naked

அவரைத் தாக்கியதாக 7 நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் நடைபெறாது தடுக்க, கிராமத்தில் பொலிஸ் படைகள் குவிக்கபட்டுள்ளன.

ஓடிப்போன காதலர்கள் ஒரே கிராமம் மற்றும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுடன் ஓடிய பெண்: காதலனின் தாயைக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம் | Girl Boyfriend Escape Parade Lover S Mother Nakedவர்க்க வேறுபாடு காரணமாக காதலனை பெண் குடும்பத்தினர் ஏற்கவில்லை எனவும் தெரிய வருகிறது.

மேலும், விடிந்தால் திருமணம் என்ற சூழலில் மகள் ஓடிப்போன ஏமாற்றத்தில், பெண் வீட்டார் இவ்வாறு வெறியாட்டம் நிகழ்த்தி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்திருக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா,

”இது ஒட்டுமொத்த சமூகத்தையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

இவ்வாறான கொடூரமான செயல்களை எக்காரணம் கொண்டும் எங்கள் அரசு பொறுத்துக் கொள்ளாது” என்று தெரிவித்துள்ளார்.