நீர்கொழும்பு சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த கைதி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த கைதி

ர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று மாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சீதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 23ஆம் திகதி முதல் சுகயீனமாக இருந்த குறித்த கைதி இவ்வாறு உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.