தென்கொரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரின் புகைப்படம் வெளியானது! மனைவியின் அதிர்ச்சி தகவல்.

தென்கொரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரின் புகைப்படம் வெளியானது! மனைவியின் அதிர்ச்சி தகவல்.

தென்கொரிய நாட்டிற்கு வேலைக்குச் சென்ற இலங்கையரை மற்றொரு இலங்கை நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் கடந்த 03-12-2023 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தென்கொரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரின் புகைப்படம் வெளியானது! மனைவியின் அதிர்ச்சி தகவல் | Photo Of Sri Lankan Killed In South Korea Publishகுறித்த சம்பவத்தில் பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதான பி.கே. ஷெனித் துலாஜ் சத்துரங்க என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் 26 வயதான மனைவி மெலனி வாசனா சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்ததாவது,

எனக்கும் சத்துரங்கவுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் ஜப்பானில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்தார்.

தென்கொரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரின் புகைப்படம் வெளியானது! மனைவியின் அதிர்ச்சி தகவல் | Photo Of Sri Lankan Killed In South Korea Publish

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்தார். பின்னர் இந்த ஆண்டு ஒகஸ்ட் 19 ஆம் திகதி கொரியாவுக்கு வேலைக்குச் சென்று வெல்டராக வேலை செய்து வந்தார். 

கொரியாவின் மோப்போ பகுதியில் உள்ள அவரது அறையில் அவருடன் மேலும் இருவர் உள்ளனர். அடுத்த அறையில் மேலும் இருவர் இருந்தனர்.

அவர்களில் ஒருவர் எப்பொழுதும் குடித்துவிட்டு வந்து சத்துரங்காவிடம் சண்டையிடுவார் என்று அவர் என்னிடம் பலமுறை கூறியிருந்தார்.

தென்கொரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரின் புகைப்படம் வெளியானது! மனைவியின் அதிர்ச்சி தகவல் | Photo Of Sri Lankan Killed In South Korea Publishஅதை அங்கிருந்த ஏஜெண்டிடம் சொல்லியிருந்தார். தங்குவதற்கு பிரச்சனையாக இருக்கிறது, இடத்தை மாற்றி தருமாறு கோரியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என்னிடம் பேசும் போது, ​​அடுத்த அறையில் உள்ள அருணா என்ற நபரால் பிரச்சினையாக உள்ளது என கூறினார்.

அப்போது நான் ஏதும் பேசாதே அமைதியாக இரு என சொன்னேன். அதன் பிறகு சத்துரங்க உறங்க சென்றுவிட்டார்.

தென்கொரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரின் புகைப்படம் வெளியானது! மனைவியின் அதிர்ச்சி தகவல் | Photo Of Sri Lankan Killed In South Korea Publish

உறங்கிக் கொண்டிருந்த போது பக்கத்து அறையை சேர்ந்த நபர் வந்து கத்தியால் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார்.

அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்று நம்ப முடியவில்லை. இப்போது என் குழந்தையின் உலகமே இருண்டுவிட்டது.

நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சென்றிருந்தோம். அப்போதுதான் அந்த நாட்டில் இருந்து சத்துரங்காவை கத்தியால் குத்திய நபர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது என்றார்.