பொதுத்தேர்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று

பொதுத்தேர்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக மாவட்ட  செயலாளர்கள் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று  இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு   சதவீதம் குறித்து மீளாய்வு செய்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை  தபால்  மூலமான வாக்குகளை பதிவுசெய்யாதவர்கள்   வாக்களிப்பதற்கு  இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக . தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கு  ஜூலை  மாதம் 13  ஆம் திகதி தொடக்கம்  17  ஆம் திகதி வரையும் அதில் தவிர்க்க முடியாத காரணங்களினால் வாக்களிப்பதற்கு தவறியவர்களுக்கு ஜூலை  மாதம்  20, 21  ஆகிய திகதிகளில்  மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம்   வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த தினங்களில் வாக்களிக்க தவறியவர்களுக்கு மேலும் இரு விசேட தினமாக  நேற்றும் இன்றும்   வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

இதற்கமைய  தத்தமது  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில்  இன்று முற்பகல்    8.30 தொடக்கம்   பிற்பகல் 2.00 மணிவரை வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள ஆணைக்குழு  தெரிவித்துள்ளது