முக்கியமான 70 பேரின் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்னும் கிடைக்கவில்லை - வைத்தியர் வெளியிட்டுள்ள தகவல்

முக்கியமான 70 பேரின் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்னும் கிடைக்கவில்லை - வைத்தியர் வெளியிட்டுள்ள தகவல்

கந்தகாடு பராமரிப்பு முகாமில் பணியாற்றிய இராணுவ உத்தியோகத்தரின் நடவடிக்கைகளின் மூலம் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள ஏனையோரின் பீ.சீ.ஆர். பரிசோதனை அறிக்கையை தாம் எதிர்பார்த்த வண்ணம் இருப்பதாக கலவான ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று தெரிவித்தனர்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய இராணுவ வீரர் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்த பின்னர் பல இடங்களிலும் நடமாடியதையடுத்து இவருடன் தொடர்புபட்ட 81 பேர் இரண்டு கட்டங்களில் தனிமைப்படுத்தலுக்கும் அதன் பின்னர் பீ.சீ.ஆர் பரி சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

இதன் முதற் கட்டமாக இராணுவ வீரர் தொடர்புபட்ட நேரடி உறவுகள் 11 பேர் உடனடி தனிமைப் படுத்தப்பட்டதன் பின்னர் இவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

இராணுவ வீரருடன் தொடர்பு வைத்திருந்த முக்கியமான 70 பேருக்கான இரண்டாம் கட்ட பிரிவினருக்கான தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதுடன் இவர்கள் தொடர்பான பீ.சீ.ஆர். வைத்திய பரிசோதனையறிக்கை நேற்று வரை கிடைக்கவில்லை என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மேற்படி 70 பேரினதும் வைத்திய அறிக்கையை அனைவரும் முக்கியத்துவத்துடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.