இலங்கையில் இரு அரச வங்கிகளுக்கு பாரிய ஆப்பு வைத்த 10 உயர்மட்ட வர்த்தகர்கள்!

இலங்கையில் இரு அரச வங்கிகளுக்கு பாரிய ஆப்பு வைத்த 10 உயர்மட்ட வர்த்தகர்கள்!

இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாக  இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இரு அரச வங்கிகளுக்கு பாரிய ஆப்பு வைத்த 10 உயர்மட்ட வர்த்தகர்கள்! | Businessmen Defaulted Loans Rupeess Tate Banks10 உயர்மட்ட வர்த்தகர்கள் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் அதிக தொழில் செய்து அரசியல் பாதுகாப்பை பெற்று சம்பாதித்த பணத்தை அந்தந்த இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளனர்.

இலங்கை வங்கிக்கு 5,000 கோடி ரூபாவையும் மக்கள் வங்கிக்கு 3,000 கோடி ரூபாவையும் இவர்கள் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.