சீனாவின் சர்வாதிகார இலக்குகளுக்கு வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி! உருவானது புதிய கூட்டணி

சீனாவின் சர்வாதிகார இலக்குகளுக்கு வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி! உருவானது புதிய கூட்டணி

சீனாவிற்கு எதிராக எட்டு நாடுகளைச் சேர்ந்த எம்பிக்கள் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நியூ இன்டர் பார்லிமென்ட்ரி அல்லயன்ஸ் என அந்த கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கும் உலக வர்த்தகத்திற்கும் சீனா எதிரானதாக இருப்பதாக குற்றம் சாட்டியே இந்த எட்டு நாடுகளைச் சேர்ந்த எம்பிக்கள் புதிய கூட்டணி ஒன்றினை அமைத்துள்ளனர்.

இந்த அமைப்பில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன், நோர்வே ஆகிய எட்டு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்பிக்கள் இணைந்து சீனாவின் சர்வாதிகார இலக்குகளுக்கு தடைபோடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.