அந்த சம்பவம், சத்தம் இப்போதும் கேட்கிறது- இழப்பு குறித்து விஜய்யின் அப்பா.

அந்த சம்பவம், சத்தம் இப்போதும் கேட்கிறது- இழப்பு குறித்து விஜய்யின் அப்பா.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய்.

இவர் படமா கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் விநியோகஸ்தர்கள் உள்ளார்கள், அவரது படத்தை தயாரிக்க போட்டிபோடும் தயாரிப்பாளர்களும் உள்ளார்கள்.

Seven Screen Studio தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் கலெக்ஷன் ரூ. 600 கோடியை எட்டிவிட்டது.

அடுத்து AGS நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

அந்த சம்பவம், சத்தம் இப்போதும் கேட்கிறது- இழப்பு குறித்து விஜய்யின் அப்பா | Actor Vijay Father About His Late Daughter Vidhyaஎஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை இயக்குனர் என்பதை தாண்டி நடிகர் விஜய்யின் அப்பா என்று தான் அதிகம் அடையாளப்படுத்தப்படுகிறார்.

இவர் ஒரு பேட்டியில் மறைந்த தனது மகள் வித்யா குறித்து பேசி எமோஷ்னல் ஆகியுள்ளார்.

அதில் அவர், எங்களது மகள் வித்யா இழந்தது மிகப்பெரிய இழப்பு. ஒருநாள் பேசிக்கொண்டு இருக்கும் போது வருகிறேன் என சொல்லி அவளை தூக்கினேன், அப்போது வாயிலிருந்து ரத்தம்.

அப்படியே தூக்கிக்கொண்டு கோவில், குளம் என சென்றோம், காரணம் மருத்துவர்கள் பார்த்துவிட்டு முடியவே முடியாது என கையை விரித்துவிட்டார்கள்.

என் மடியில் தான் வைத்திருந்தேன், அவள் உயிர் பிரிந்ததும் விஜய், வித்யா என சத்தம் போட்டான்.

அப்படி அவன் சத்தம் போட்டதே இல்லை, அந்த சத்தம் இன்னும் எனது காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என எமோஷ்னலாக பேசியுள்ளார்.அந்த சம்பவம், சத்தம் இப்போதும் கேட்கிறது- இழப்பு குறித்து விஜய்யின் அப்பா | Actor Vijay Father About His Late Daughter Vidhya