
தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற பகீர் சம்பவம்.
திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 59 வயதுடைய வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அங்கிருந்த பணத்தையும் எடுத்துச் சென்றதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்று (26) இரவு திஹாரிய பிரதேசத்தில் இரண்டு கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.