இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை மத்திய வங்கி தேவையான பொழுது பயன்படுத்திக்கொள்வதற்காக தற்காலிக மூலமொன்றாக அமெரிக்க டொலர் திரவத்தன்மையினைப் பெற்றுக்கொள்வதற்காக பெடரல் ரிசேர்வ் வங்கி நியூயோர்க்குடன் அண்மையில் உடன்படிக்கையொன்றினைச் செய்திருக்கிறது.

இவ்வசதியானது தொழில்நுட்ப சொற்பதத்தில் ´வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நாணய அதிகார சபைகளுக்கு" கிடைக்கத்தக்கதாக இருக்கும் ஓரிரவு மீள்கொள்வனவு வசதியாகும்.

உலகில் உள்ள அநேக மத்திய வங்கிகள் அவற்றின் குறுங்கால அமெரிக்க டொலர் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக இவ்வசதியினை நாடியிருக்கின்றன.

இவ்வசதியானது, மத்திய வங்கியை வெளிநாட்டுச் செலாவணியிலமைந்த அதன் நீண்டகால முதலீட்டு சொத்துப்பட்டியலில் சடுதியான எந்தவொரு அமைப்பியல் சீராக்கத்தினையும் செய்யாமல் தேவையானபொழுது குறுங்கால நிதியிடல்களைப் பெற்றுக்கொள்வதனை இயலுமைப்படுத்துகின்றது.