எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள்....!
தான் கைது செய்யப்படுவதனை ரத்து செய்யுமாறு கோரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர் கொழும்பு சிறைச்சாலயின் கண்காணிப்பாளர் அனுருந்த சம்பாயோ தாக்கல் செய்த ஏவல் மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீற்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் சிறைச்சாலை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 04 பேரை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதனை தொடர்ந்து இந்த ஏவல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.