
தப்பிச் சென்ற கொரோனா நோயாளி மீண்டும் வந்தது எப்படி?
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொரோனா நோயாளி தப்பிச் சென்று மீண்டும் வந்தது எப்படி என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து இன்று காலை தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எப்படி வந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நோயாளி, கொழும்பு பிரதான வீதிக்குக்கு சென்று, அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா நோயாளி கொழும்பு பிரதான வீதிக்கு எப்படி சென்றவர் என்பது குறித்து அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளிகளை கொழும்பு கோட்டையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியை கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.