பாட்டிக்கு துணையாக இருந்த தமிழ் சிறுமி மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை.

பாட்டிக்கு துணையாக இருந்த தமிழ் சிறுமி மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை.

பாட்டிக்கு துணையாக இருந்த 14 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

உடப்புஸ்ஸலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமியே காணாமற் போனவராவார்.

கடந்த வெள்ளிக்கிழமை(03) பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய பின்னர் சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி புதன்கிழமை தந்தை, சிறுமியை கந்தப்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பூப்பனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் சிறுமியின் பாட்டி வீட்டில் தீபாவளி பண்டிகை முடியும் வரை பாட்டிக்கு துணையாக அழைத்து வந்து விட்ட நிலையிலேயே காணாமற்போயுள்ளார்.

பாட்டிக்கு துணையாக இருந்த தமிழ் சிறுமி மாயம் : தீவிர தேடுதலில் காவல்துறை | Tamil Girl Is Missingஇவர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது 075 620 3901 என்ற தொலைபேசிக்கு தகவல் வழங்குமாறு காவல்துறையினர் மற்றும் பெற்றோர் அறிவித்துள்ளனர்.