தீபாவளி திருநாளில் துன்பங்கள் விலகி நன்மைகள் கிடைக்க செய்யவேண்டியது!

தீபாவளி திருநாளில் துன்பங்கள் விலகி நன்மைகள் கிடைக்க செய்யவேண்டியது!

தீபாவளி இந்துக்களால் கொண்டாட்டப்படும் பண்டிகை ஆகும். தீபாவளித் திருநாள் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளில் வரும் அல்லது தீபாவளிக்கு அடுத்தநாள் வரும்.

தீபாவளி திருநாளில், முன்னோர்களை வணங்குவது நல்லது. இறந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று சொல்லுவோம். நம் குடும்பத்தில் இறந்துவிட்ட முன்னோர்களை தொடர்ந்து வழிபடச் சொல்லி வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.

தீபாவளி திருநாளில் துன்பங்கள் விலகி நன்மைகள் கிடைக்க செய்யவேண்டியது! | Highlights Of Diwali Amavasi Pitru Worshipஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்றும் இந்தநாளில், மறக்காமல் முன்னோர்களை வணங்கினால் நல்லது நடக்கும். அதோடு அவர்களுக்கு தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டும் எனவும் பெரியவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

தீபாவளித் திருநாள் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளில் வரும் அல்லது தீபாவளிக்கு அடுத்தநாள் வரும். தீப ஒளித்திருநாளில், முன்னோர்களை வணங்கவேண்டும்.

தீபாவளி திருநாளில் துன்பங்கள் விலகி நன்மைகள் கிடைக்க செய்யவேண்டியது! | Highlights Of Diwali Amavasi Pitru Worshipஅதோடு  தர்ப்பணம் முதலான சடங்கு சாங்கியங்களைச் செய்வதும் நல்லது. அத்துடன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து முன்னோர் படங்களுக்கு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும்.

முடிந்தால், அன்றைய தினம் நம் முன்னோர்களை நினைத்து, அருகில் உள்ள ஏழை எளியோருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பது, உணவு அளிப்பது என தான தர்மங்கள் செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறும்.

தீபாவளி திருநாளில் துன்பங்கள் விலகி நன்மைகள் கிடைக்க செய்யவேண்டியது! | Highlights Of Diwali Amavasi Pitru Worshipதீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவது தவறில்லை என்றும் தீபாவளி அமாவாசை கணக்கில்லை என்றும் ஒரு சிலர் அன்றைய தினம் அசைவம் சமைத்து சாப்பிடுவார்கள். கோலமிடுவார்கள்.

ஆனால் அப்படி செய்வது நல்லதல்ல என்று ஆச்சாரிய பெருமக்கள் கூறுகின்றனர். அமாவாசை எப்போது வந்தாலும் சரி, சுத்தமாக குளித்துவிட்டு நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்பணங்கள் வழிபாடுகள் என அனைத்தையும் செய்திட வேண்டும்.

தீபாவளி திருநாளில் துன்பங்கள் விலகி நன்மைகள் கிடைக்க செய்யவேண்டியது! | Highlights Of Diwali Amavasi Pitru Worshipஅசைவம் சாப்பிடக்கூடாது. கோலமிடுதலும் கூடாது. அமாவாசைக்கு மறுநாள் அல்லது முதல் நாளே அசைவம் சாப்பிட்டுக்கொள்ளலாம்.

இந்த வருடம் அமாவாசை திதி, தீபாவளி (12) அன்று மதியம் ஆரம்பித்து அடுத்தநாள் முடிவடைகிறது. அதனால் அசைவம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அப்படி சாப்பிடுபவர்கள் திதி ஆரம்பிக்கும் முன்பே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.