
சற்று முன்னர் மேலும் சில பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!
கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2763 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில், ஏற்கனவே 2753 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் 09 பேர் கந்தகாடு போதைபொருள் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் மற்றைய நபர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேனியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 94 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 658 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுறுதியானவர்களை கண்டறியவதற்காக நாட்டில் இதுவரையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.