தடுப்புக்காவலில் விசாரிக்க அனுமதி!

தடுப்புக்காவலில் விசாரிக்க அனுமதி!

புத்தளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட  மதுவரி திணைக்கள அதிகாரி உள்ளிட்ட நால்வரை  தடுப்புக்காவில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம்   அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட   பெண்கள்   நால்வர் ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிப்பதற்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக  நபர்கள்  புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில்  நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட  மதுவரி திணைக்கள அதிகாரி உள்ளிட்ட   சந்தேகநபர்கள் மூவரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளுக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் நாளைய தினம் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.