கொரோனா வைரஸ்: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 94 பேராக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரவித்துள்ளது.
மேலும் 1இலட்சத்து 50 ஆயிரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.