உலக திருமணமான அழகி போட்டி : இலங்கையைச் சேர்ந்த அழகியும் பங்கேற்பு
இந்தியாவின் புதுடெல்லி, ரோஹினியில் நடைபெறவுள்ள Miss Unity World-2023 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை திருமணமான அழகுராணியான திருமதி சாமிகா விதானவாசம், வென்றுள்ளார்.
இறுதிப் போட்டி ரோகிணியில் உள்ள கிரவுன் பிளாசா மைதானத்தில் வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது.
சாமிகா நேற்று முன்தினம் (நவ:02) போட்டியில் பஙகேற்பதற்காக இந்தியா புறப்பட்டார்.
சாமிகா இதற்கு முன்னர் மியன்மாரில் நடைபெற்ற "சர்வதேச திருமணமான மிஸ்" போட்டியி்ல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர் பலரால் பாராட்டப்பட்டு மதிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு, யுனைடெட் மிஸ் வேள்ட் போட்டிக்கு பல நாடுகளில் இருந்து ஏராளமான திருமணமான அழகு ராணிகள் பங்குபற்றுகின்றனர்.
