மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 16 வயது மாணவி..!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 16 வயது மாணவி..!

மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (02.11.2023) மாலை மாவத்தகம, 09 ஆம் கம்பம் கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதியும் பின்னால் அமர்ந்து சென்ற மகளும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 16 வயதுடைய மகள் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 16 வயது மாணவி | 16Year Old Student Who Died In Motorcycle Accident

இதனையடுத்து குறித்த மாணவி அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன்போது கஹபத்வல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.