இலங்கையில் 1இலட்சத்து 50 ஆயிரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் 1இலட்சத்து 50 ஆயிரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் 1இலட்சத்து 50 ஆயிரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2,077 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 665 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதுடன் சந்தேகத்தின்பேரில் 101 பேர், வைத்தியக்கண்காணிப்பிலும் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.