கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம்

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம்

புத்தளம், பாலாவி - ரத்மல்யாய, முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் இன்றைய தினம் (01-11-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 34 வயதான முஹம்மது ஹனீபா பாத்திமா மபாஸா எனும் 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter

நேற்றிரவு 1.30 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வீட்டில் கணவனும், 3 பிள்ளைகளும் தூங்கிய பின்னர் குறித்த இளம் பெண் விட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter

குறித்த இளம் பெண்ணுக்கும், கணவனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உள்ளான நிலையிலேயே அந்த இளம் பெண் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தனது கணவரால்தான் தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது 3 பிள்ளைகளையும் தனது தாயிடம் ஒப்படைக்குமாறும் உயிரிழந்த இளம் பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

மேலும், தனது 3 பிள்ளைகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் தனது சகோதரனுக்கு அறிவுரை கூறி அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter

அத்தோடு ''என்னை மன்னித்து விடுங்கள்'' என்று உயிரிழந்த இளம் பெண் தனது இடது கையிலும் பேனையால் எழுதியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தில் சுருக்கிட்டுக் கொண்டமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்பளித்து சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.