பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான புதிய தகவல்

பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான புதிய தகவல்

எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போது பேருந்து கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசலின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டால் நிச்சயமாக பேருந்து கட்டணத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான புதிய தகவல் | Price Of Fuel Change In Bus Tickets

இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 356 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.