24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 884 ஆக அதிகரிப்பு

24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 884 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்த வைரஸ் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை அங்கு 2 இலட்சத்து 57 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் மாத்திரம் இதுவரை 7 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதேவேளை, உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளனர்.

 

அத்துடன் கொவிட் 19 தொற்றால் இதுவரை 4 லட்சத்து 5 ஆயிரத்து 74 பேர் பலியாகியுள்ளனர்.

 

எனினும் சர்வதேச அளவில் கெரோனா வைரஸ் தொற்றில் இருந்து 34 லட்சத்து 55 ஆயிரத்து 99 பேர் குணமடைந்துள்ளனர்.

 

இதேவேளை, கொவிட் 19 தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 7 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.

 

அங்கு இதுவரையில், ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.