வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் மாற்றம்.

வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் மாற்றம்.

வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் இன்று (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் முதல் மாகோ வரையான ரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கல்கிஸ்ஸை முதல் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் உள்ளடங்கலாக அனைத்து வடபகுதிக்குமான ரயில் நேர அட்டவணைகள் இன்று முதல் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குக்கான புகையிரத நேர அட்டவணையில் மாற்றம் | Change In Train Timetable For Northern

இதேவேளை வடபகுதிக்கான ரயில் சேவைகள் அடுத்த மாதம் முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.