யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பெண் இராணுவ சிப்பாய்க்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பெண் இராணுவ சிப்பாய்க்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையை திருடிய சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேருந்துக்காக பெண் சிப்பாய் காத்திருந்த வேளை அவரது கைப்பையை திருடிக்கொண்டு சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளார்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பெண் இராணுவ சிப்பாய்க்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் | Shocking Incident With Female Soldier In Jaffna

கைப்பையினுள் ஒரு பவுண் நகை , பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணப்பட்ட நிலையில் , அது தொடர்பில் சிப்பாய் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர் கொடிகாமம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேகநபரை கைது செய்த வேளை அவரது உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.