1.2 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி

1.2 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி

2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை, , 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாகன இறக்குமதியானது 286 மில்லியன் அமெரிக்க டொலராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1.2 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி | Srilanka Import Of Vehicles Worth Over 1 2 Billion2020 இல் விதிக்கப்பட்ட கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் இலங்கை இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனிப்பட்ட மற்றும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பித்தது.

இதன்படி, இந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்காக அதிகபட்ச தொகையானது கடந்த செப்டம்பர் மாதத்தில் செலவிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மாதாந்த தொகை கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,

ஜனவரி 29.1 மில்லியன் அமெரிக்க டொலர்

பிப்ரவரி 22.3 மில்லியன் அமெரிக்க டொலர்

மார்ச் 54.0 மில்லியன் அமெரிக்க டொலர்

ஏப்ரல் 145.6 மில்லியன் அமெரிக்க டொலர்

மே 125.2 மில்லியன் அமெரிக்க டொலர்

ஜூன்169.6 மில்லியன் அமெரிக்க டொலர்

ஜூலை 206.0 மில்லியன் அமெரிக்க டொலர்

ஆகஸ்ட் 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்

செப்டம்பர் 286.0 மில்லியன் அமெரிக்க டொலர்