உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை

உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்கும் இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

அதன்படி, பரீட்சைகள் நிறைவடையும் வரை குறித்த தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை | Private Classes Banned Midnight Tonight A L Exams

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில், 340,525 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.