கொழும்பில் தப்பியோடிய கொரோனா நோயாளியை கண்டுபிடிக்க களமிறங்கிய அதிரடி படை

கொழும்பில் தப்பியோடிய கொரோனா நோயாளியை கண்டுபிடிக்க களமிறங்கிய அதிரடி படை

கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நோயாளியை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் தற்போது சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த செயற்பாட்டிற்காக பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 100 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நோயாளியை கண்டுபிடிப்பதற்காக வைத்தியசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.