கொழும்பு – வெள்ளவத்தைப் பகுதியில் இந்திய பிரஜை ஒருவர் தற்கொலை!

கொழும்பு – வெள்ளவத்தைப் பகுதியில் இந்திய பிரஜை ஒருவர் தற்கொலை!

கொழும்பு 6 வெள்ளவத்தை பகுதியில் இந்திய பிரஜை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்திய பிரஜை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நேற்று பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

25 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக   அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையின் பின்னர் சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்திய தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன்  கொழும்பு 6 வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.