இன்றும் நாளையும் அஞ்சல்மூல வாக்களிப்பு

இன்றும் நாளையும் அஞ்சல்மூல வாக்களிப்பு

இன்றும் நாளையும் அஞ்சல்மூல வாக்களிப்பை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு மணிவரையும், நாளை காலை எட்டு 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் அஞ்சல் மூல வாக்களிப்பை செலுத்த முடியும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை அஞ்சல்மூல வாக்களிப்பை செலுத்த முடியாத அரச பணியாளர்கள் தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி காரியாலயத்தில் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக கொரோனா தொற்றாது என உறுதியளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.