தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது பொதுஜன பெரமுனவினர் தாக்குதல் முயற்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது பொதுஜன பெரமுனவினர் தாக்குதல் முயற்சி!

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் மீது உயிலங்குளம் பகுதியில் வைத்து பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த இருவர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மன்னார் உயிலங்குளம் பகுதிக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த பகுதியில் அவருடைய வாகனத்தை மறித்த பொது ஜன பெரமுன கட்சியினுடைய ஆதரவாளர்கள் சிலர் அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்ய சென்ற நிலையில் அங்கு முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்தனர்.