
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை!
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அனைத்து அரச ஊழியர்களினதும் தொழிற்சங்கங்கள் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள ஆணைக்குழு தெரிவித்துள்ளது.